தீவிரவாதத்தின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த இலங்கை மக்களுக்கு மீண்டும் சுதந்தரம் வாங்கிக்கொடுத்தவர் என்னுடைய கணவர். அவரை ராஜபட்சே அரசு பழிவாங்கிவிட்டது. அவமானப்படுத்திவிட்டது. இப்படி கண்ணீரும் கம்பலையுமாகப் பேசியிருக்கிறார் இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவின் மனைவி அனோமா. இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள அவரை எப்படியாவது மீட்டெடுக்கவேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மன்றாடிவிட்டுச் சென்றிருக்கிறார் இலங்கை எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கே. ஃபொன்சேகா கைது விவகாரத்தில் எந்த நாடும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கமுடியாது என்று கொக்கரித்துள்ளது இலங்கை அரசு. என்னதான் நடக்கிறது இலங்கையில்?
கரம் கோத்துச் செயல்பட்டுக் கொண்டிருந்த மஹிந்த ராஜபட்சேவும் சரத் ஃபொன்சேகாவும் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்த நொடியில் இருந்தே இருவருக்குமான யுத்தம் தொடங்கிவிட்டது. உச்சக்கட்டமாகத்தான் ராணுவ உடையைக் கழற்றிவிட்டு, எதிர்கட்சிகளின் ஒன்றுபட்ட ஆதரவைத் திரட்டிக்கொண்டு திடுதிப்பென தேர்தல் களத்துக்கு வந்தார் ஃபொன்சேகா.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்னால் ராஜபட்சேவின் தூக்கத்தைக் கெடுத்த ஒரே நபர் சரத் ஃபொன்சேகா மட்டுமே. எனினும், சிங்களர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மஹிந்த ராஜபட்சே வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டார்.
வாக்கு வித்தியாசம் அதிகரித்துக் கொண்டிருக்கும்போதே சர்வதேச அளவிலான ஊடகங்கள் சரத் ஃபொன்சேகாவின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துக் கொண்டிருந்தன. வெற்றி அறிவிப்பு வந்தபோதே பரபரப்பும் தொற்றிக்கொண்டது. இன்று கைது செய்யப்படுவார். இல்லையில்லை. அநேகமாக நாளை கைதாகக்கூடும் என்று நித்தம் நித்தம் ஊகத்தின் அடிப்படையிலான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. அதன் காரணமாகவே தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக செய்தியார்களுக்குத் தகவல் கொடுத்தார் ஃபொன்சேகா. ஆனால் அவர் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. கைதுக்கான எந்தவித முஸ்தீபுகளும் இல்லை.
ஒருவேளை சரியான சந்தர்ப்பத்துக்காக ராஜபட்சே காத்துக்கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. அந்தச் சந்தர்ப்பத்தை ஃபொன்சேகாவே ஏற்படுத்திக்கொடுத்தார். மேலும் படிக்க.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
Visit our website for more information http://www.thalaivan.com
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment