ஊரில் பிழைக்க வழியில்லாமல், பணத்துக்கு அலைந்து, வேலைதேடி சொந்த ஊரை, பெற்றோரை, உறவுகளை விட்டுவிட்டு மும்பை போகும் தமிழர்களை வரவேற்கும் இடம் தாராவி. சின்னச் சின்ன ஒண்டுக்குடித்தனங்களால் நிரம்பிய பகுதி அது. அந்தத் தாராவியைப் பற்றிய புத்தகம் ஒன்றை மினிமேக்ஸ் வெளியிட்டுள்ளது.

மும்பைக்குப் பிழைக்கச் சென்ற தமிழர்கள் தாராவியைத் தேர்வு செய்ததன் பின்னணி என்ன என்பது தொடங்கி தாராவித் தமிழர்களை அங்கிருக்கும் அரசியல் கட்சிகள் எப்படிப் பயன்படுத்திக்கொள்கின்றன என்பது வரை பல விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் சரவணா ராஜேந்திரன். தற்போது மும்பையில் வசித்துவரும் இவர், தாராவியின் மேம்பாடு குறித்தும் தாராவித் தமிழர்களின் முன்னேற்றம் குறித்தும் ஊடகங்களில் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்.
அதிக அளவில் பணம் சேர்ந்துவிட்டபிறகு, அவற்றை இங்கே வைத்திருப்பது சாத்தியமில்லை. வருமானவரித்துறை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கழுகுக் கண்களில் இருந்து பணத்தைப் பத்திரமாகப் பாதுகாக்க பணக்காரர்கள் நாடுவது ஸ்விஸ்பேங்க்.
அது என்ன ஸ்விஸ் பேங்க்? ஸ்விஸ் வங்கிக்கும் கறுப்புப் பணத்துக்கும் என்ன தொடர்பு? வரி ஏய்ப்பு செய்ய நினைப்பவர்கள் ஸ்விஸ் வங்கிகளை ஏன் தேர்வு செய்கிறார்கள்? ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் குத்துமதிப்பாக எவ்வளவு இருக்கிறது? அவற்றை அரசாங்கத்தால் மீட்க முடியுமா? என்பன போன்ற பல விவரங்களை மினிமேக்ஸ் வெளியீடாக வந்துள்ள “ஸ்விஸ் பேங்க்’ புத்தகத்தில் பத்திரிகையாளர் சந்திரமௌலி சொல்லியிருக்கிறார்.
தாராவி
ஸ்விஸ்பேங்க்
1 comments:
புத்தகக் கண்காட்சீக்குப் போகாமலேயே நிறைய பார்த்து விட்டோம் போலிருக்கிறதே...
Post a Comment