அண்ணாதுரை? முரசொலி மாறன்? வைகோ?
என்னைக் கேட்டால் நாஞ்சில் மனோகரனைத்தான் சொல்வேன். காரணம், மேடும் பள்ளமும் என்ற தலைப்பில் தராசு இதழில் வெளியான அவருடைய அரசியல் அனுபவத் தொடர். நேரு, சாஸ்திரி, ராம் மனோகர் லோகியா, ஜெகஜீவன் ராம், இந்திரா, மொரார்ஜி, நீலம் சஞ்சீவ ரெட்டி, சந்திரசேகர், வாஜ்பாய், இந்திரஜித் குப்தா போன்ற தேசிய அரசியலின் முக்கியத் தலைவர்கள் அத்தனைபேருக்கும் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார் நாஞ்சிலார்.

ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு வகையிலான நட்பு அவருக்கு. உதாரணத்துக்குச் சில சம்பவங்கள்:
இந்தி எதிர்ப்புப் பிரச்னை தமிழ்நாட்டில் தீவிரமாக இருந்த காலகட்டம் அது. இதுவிஷயமாக பிரதமர் நேருவைச் சந்தித்துப் பேசுவதற்காகச் சென்றார் திமுக நாடாளுமன்ற உறுப்பபினர் நாஞ்சில் மனோகரன்.
உட்காரச் சொல்லிவிட்டு சிகரெட் ஒன்றைப் பற்றவைத்தார் நேரு. இன்னொரு சிகரெட்டை எடுத்து மனோகரனிடம் நீட்டினார். அவர் வாங்கிக்கொண்டதும் நேருவே அந்த சிகரெட்டைப் பற்றவைத்தார்.
அப்போது நேரு, “இந்தி திணிக்கப்பட மாட்டாது; நான் இருக்க, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?' என்று கேட்டார்.
உடனே நாஞ்சிலார், 'How long you are going to be here - politically. more sol physically?' என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.
பதற்றமடையாமல் அமர்ந்திருந்த நேரு, நாஞ்சிலாரின் முதுகைத் தடவியபடியே,
'You are emotional' என்று சிரித்தபடியே சொல்லியிருக்கிறார்.
நேருவுக்கும் மனோகரனுக்கும் இடையே அவையில் நிறைய வாதப் பிரதிவாதங்கள் நடந்துள்ளன. நேருவின் மகள் இந்திராவுடனும் நாஞ்சிலாருக்கு நல்ல நட்பு இருந்தது.
டெல்லியில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். ஒருநாள். தாள முடியாத குளிரைத் தாக்குப் பிடிக்க கோட்டும் சூட்டும் அணிந்து, டை கட்டிக்கொண்டு நாடாளுமன்றம் புறப்படுவதற்குத் தயார் ஆனேன்.
எனது அருமை நண்பர் ஒருவர் தோட்டத்திலிருந்து சிவப்பு ரோஜா ஒன்றைப் பறித்தெடுத்து எனது கோட்டில் சூட்டினார்.
நாடாளுமன்றத்தில் மைய மண்டபத்தில் நண்பர்களுடன் நான் உட்கார்ந்திருந்தபோது, இந்திரா அம்மையார் அவ்வழியே வந்தார்.
என்னைப் பார்த்ததும் அங்கேயே நின்றார்.
புன்முறுவல் பூத்துக்கொண்டே சொன்னார்:
'Manoharan, you look smart'
நான் திருப்பிச் சொன்னேன்:
"madam, i am always Smart'
அதற்கு அவர் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்:
'You are especially smart today' என்றார்.
நன்றி தெரிவித்தேன்.
நாஞ்சில் மனோகரன் - இந்திரா இடையேயான நட்புக்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். பல சந்தர்ப்பங்களில் திமுக பற்றி, கலைஞர் பற்றி, அதிமுக பற்றி, எம்.ஜி.ஆர் பற்றி இந்திரா காந்தி புரிந்துகொள்வதற்கு நாஞ்சில் மனோகரனின் பங்கு முக்கியமானது.
திராவிட இயக்கங்களின் டெல்லி அரசியலைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் நாஞ்சில் மனோகரனின் இந்த அனுபவத் தொடரை பூஞ்சோலை பதிப்பகத்தார் நூலாக வெளியிட்டுள்ளனர். சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது. மேலும் பல அதிசய புத்தகங்களை இந்தப் புத்தகக் கண்காட்சியில் கண்டெடுக்க, வாங்க முடிந்தது. அவற்றைப் பற்றி அவ்வப்போது எழுதுகிறேன்.
2 comments:
Indra had more dignified duty than appreciating manthirkole minor's dress.it is usual gimmics of dravidian party leaders.other than sampath,era.sezhiyan and dr.kalanidhi nobody has done anything constructively including annadorai and vai.gopalsamy.VIZZY.
பூஞ்சோலைப் பதிப்பகத்தின் முகவரி தாருங்களேன்.
Post a Comment