Monday, January 12, 2009

தேர்தல் அரசியல்!

வாசித்தே தீரவேண்டும் என்று நான் போட்டு வைத்திருக்கும் பட்டியலில் இருந்து சில புத்தகங்களை இந்தக் கண்காட்சியில் வாங்கினேன். பல புத்தகங்களின் விலை மலைக்கவைக்கின்றன. இருப்பினும் அத்தியாவசியம் கருதி அவற்றை வாங்கிவிடுவேன்.

ஞாயிற்றுக்கிழமை வாங்கிய புத்தகங்கள் ஐந்து. கீழைக்காற்று கடையில் எஸ்.வி. ராஜதுரை எழுதிய இந்து இந்தியா - அக்ரனியிலிருந்து அத்வானி வரை மற்றும் பதி பசு பாகிஸ்தான் இரண்டையும் வாங்கினேன். இன்னொரு கடையில் இந்தியாவில் நெருக்கடி நிலை என்ற புத்தகம் தென்பட்டது. மேலோட்டமாகப் படித்துப் பார்த்தில் விஷயமுள்ள புத்தகம் என்று தெரிந்தது. வாங்கிவிட்டேன்.

நேஷனல் புக் டிரஸ்டில் Dr. Babasahen Ambedkar - Vasant Moon - Translated by Asha Damle வாங்கினேன். ஏற்கெனவே அம்பேத்கர் பற்றி நிறைய புத்தகங்கள் வாசித்து இருந்தாலும் இதையும் வாசிக்கத் திட்டம்.

கண்காட்சி முடிந்து பேருந்து நிறுத்தத்துக்கு வந்தபோது வழியில் நடைபாதை புத்தக விற்பனையாளர்கள் நிறைய பேர் வந்திருந்தனர். நிறைய புத்தகங்களுடன். வெளிச்சம் குறைவாக இருந்ததால் எல்லா புத்தகங்களையும் பார்க்கமுடியவில்லை. MGR - Man and the Myth புத்தகம் ஆங்கிலத்தில் கிடைத்தது.

முக்கியமாக தேர்தல் அரசியல் : காமராஜ் முதல் கருணாநிதி வரை என்ற புத்தகம் கண்ணில்பட்டது. 1952 தேர்தல் தொடங்கி 1999 நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர் தி. சிகாமணி. முதல் நாற்பது பக்கங்களை பேருந்தில் அமர்ந்தபடியே படித்தேன். என் பார்வையில் இது மிக முக்கியமான புத்தகம். இன்னும் நிறைய தேடவேண்டும்.

5 comments:

நந்தா said...

//தேர்தல் அரசியல் : காமராஜ் முதல் கருணாநிதி வரை//

எந்த பதிப்பகத்துடையது???

ஆர். முத்துக்குமார் said...

அன்புள்ள நந்தா,

தேர்தல் அரசியல் புத்தகம் பாவை பப்ளிகேஷன் வெளியீடு. ஆனால் நான் வாங்கியது நடைபாதைக் கடை ஒன்றில்.

அன்புடன்

ஆர். முத்துக்குமார்

akee said...

மேடம் இந்த்ரா என்ற நூல் யார் எழுதியது .எல்லா கடைகளிலும் கிடைக்குமா?

ஆர். முத்துக்குமார் said...

வணக்கம் akee,

இந்திரா புத்தகத்தின் ஆசிரியர் நானே. சென்னை புத்தகக்காட்சியில் தற்போது விற்பனையில் இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க எல்லா புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு உள்ளது.

நன்றி

ஆர். முத்துக்குமார்

viji said...

தங்கள் பதிவுகளுக்கு நன்றி. www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்த்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் புக் மார்கிங் சைட். நன்றி