Wednesday, November 12, 2008

ஈரல் கெட்ட எதிர்மறைக் காவல்துறை!

ஈழத்தமிழனைத்தான் காப்பாற்ற முடியவில்லை. இறையாண்மை என்ற புடலங்காய் தடுத்து நிறுத்துகிறது. சரி. உள்ளூரில் இருக்கும் தமிழனைக்கூடக் காப்பாற்றமுடியவில்லையே கலைஞர் அரசால். இன்னும் எதற்காக அவர் பதவியில் நீடிக்கவேண்டும்? புரியவில்லை.

எதிர்கட்சியினரின் ஆட்சியில் காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது என்று சொல்வார் கலைஞர். ஆனால் அவருடைய ஆட்சிக்காலத்தில் அவருடைய நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல்துறைக்கு ஈரல் மட்டுமா கெட்டுப்போயிருக்கிறது?

காவல்துறையினருக்கு ஈவு, இரக்கம், மனிதாபிமானம் இந்த மூன்றும்கூட இருக்கவேண்டும் என்று வலியுறுத்தவில்லை. குறைந்தபட்சம் ஒன்றாவது இருந்திருக்கவேண்டும் இல்லையா? ம்ஹூம். ஒரு மண்ணையும் காணவில்லை. ரத்தம் மட்டும்தான் தெறித்துவிழுகிறது.

அத்தனைத் தடியர்கள் சூழ்ந்துகொண்டு ஒரு இளைஞனை மரண அடி அடிக்கிறார்கள். அந்த இளைஞன் வலி தாங்காமல் மயங்கி அசைவற்றுக் கிடக்கிறான். அவனைவிட ஒருபடி மேலே போய் அசைவற்று நிற்கிறார்கள் காவல்துறையினர். ஊடக ஒளிப்பதிவாளர் அவர்களை நோக்கித் திரும்பினால் விலகி ஓடுகிறார்கள். கேவலம்.

பொதுமக்கள் கெஞ்சிக்கூத்தாடி காவல்துறையை உள்ளே அனுப்புகிறார்கள். அவர்களிடம் சினிமா ஹீரோ போல விரல் சொடுக்கி ஒரு தடியன் வசனம் பேசுகிறான். கைத்தடியைத் தூக்கிக் கக்கத்தில் வைத்துக்கொண்டு நிற்கிறார்கள் காவல்துறையினர். வெட்கமாகவே இல்லையா?

சட்டம், ஒழுங்கு எல்லாம் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. நேரடி சாட்சி, சட்டக்கல்லூரிக் கொடுமை. இனி கலைஞர் செய்யவேண்டியது ஒன்றுதான். காவல்துறையை வேறொரு அமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளவேண்டும். இல்லை. அண்ணா காலத்திலேயே கிடைக்காத பதவி அது. ஆகவே, என் காலம் உள்ளவரை என்னிடம்தான் இருக்கும் என்று சொன்னால் 356 வெகு தொலைவில் இல்லை.

4 comments:

Robin said...

பொதுவாக ஒரிசா போலீஸ் தான் வன்முறையை வேடிக்கை பார்ப்பார்கள். தற்போது இந்த கெட்ட பழக்கம் தமிழக போலிசாரிடையேயும் தொற்றிக் கொண்டது வேதனைக்குரிய விஷயம்.

புதுவை சிவா :-) said...

muthu,

"அண்ணா காலத்திலேயே கிடைக்காத பதவி அது. ஆகவே, என் காலம் உள்ளவரை என்னிடம்தான் இருக்கும் என்று சொன்னால் 356 வெகு தொலைவில் இல்லை"

it is a bad time DMK I mean 7 1/2

so it happen.

and I saw yesterday இறையாண்மை in Sathiyamurthy Bhavan. [Congress office]

Rajaraman said...

நாம் இந்த செந்தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா இல்லை நமீபியா அல்லது எத்தியோப்பியா போல் ஏதாவது நாட்டில் இருக்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. ஆமாம் இங்கு அரசாங்கம், போலீஸ் இவையெல்லாம் இருக்கின்றனவா. இந்த நிலையில் நாம் சிங்கள காடயரை காய்ந்து கொண்டு இருக்கிறோம்.

K.Ravishankar said...

The animals that we have seen in Discovery Channel have better behaviour than the police and media persons who are watching. Why not all the media person who are watching put their cameras and videos join together to save the student.They can't do because they have "duty" to catch the scene fresh and live to serve hot soup to the public.Photo Journalism.They join together and agitate if somebody cmment about the fourth estate. Stinking!